விலங்கினங்கள் அமைதியான மன நிலையில் வேட்டை ஆட முடியாது
விலங்கினத்திற்கு உணவு உற்பத்தி செய்ய தெரியாது, ஆகையால் தன்னை விட வலிவு குறைந்த இன்னொரு உயிரனத்தை கொன்றுதான் வாழ வேண்டியுள்ளது. ஒரு விலங்கு இன்னொரு உயிரினத்தை வேட்டை ஆடும் பொழுது அந்த விலங்கினத்தின் மன நிலை எவ்வாறு இருக்கும் என சிந்தித்து பாருங்கள். வேட்டை ஆட துடிக்கும் விலங்கு ஒரு விதமான ஆக்ரோஷ மன நிலைய அடையும், அதாவது மன அலைச்சுழல்(Mind Frequency) விரைவு அதிகமான நிலைய அடையும். இந்த மன நிலைய அடைந்தால் மட்டும்தான் அதன் இரையை அதனால் வேட்டை ஆட முடியும். அமைதியான மன நிலையில் இன்னொரு உயிரினத்தை துன்புறுத்தவே முடியாது!
வேட்டை ஆடும் விலங்கு மட்டும் அல்ல வேட்டை ஆடப்படும் விளங்கும் மிகுந்த உணர்ச்சிவச நிலையை (பயம், துன்பம்) அடைந்தே உயிரை விடுகிறது. மனித இனம் விலங்கின வித்தின் வழியே வந்ததால், இந்த உணர்ச்சிவய குணங்கள் அத்தனையும் பதிவுகளாக உள்ளன. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மனிதனின் மன அலை சுழல் (mind frequency) அதிகமாகும் பொழுது, அந்த அலைசுழலில் பதிவாகியருந்த விலங்கினத்தின் தீய குணங்கள் வெளிப்படுவதை காணலாம். சாதாரணமாக இருந்த மனிதன், கோபம் வரும் பொழுது புலி போல் பாய்வதும், பாம்பு போல் சீறுவதுமே இதற்க்கு சாட்சி. கோபம் தணிந்தவுடன், நாமா இந்த காரியத்தை செய்தோம் என்ற அளவிற்கு வியப்பும், வெட்கமும் அடைவான்.
விலங்கினப்பதிவே மனிதன் செய்யும் குற்றத்திற்கு மூலக்காரணம்!
நம் முன்னோர்கள், மனிதன் செய்யும் குற்றங்களை 5 ம் பெரும் பழிசெயல்கலாக பிரித்துள்ளனர்.
நம் முன்னோர்கள், மனிதன் செய்யும் குற்றங்களை 5 ம் பெரும் பழிசெயல்கலாக பிரித்துள்ளனர்.
1. பொய்
2. சூது
3. களவு
4. கொலை
5. கற்பழித்தல்.
இந்த உலகத்தில் உள்ள எந்த குற்றத்தை எடுத்தாலும் இந்த 5 பிரிவுக்குள்தான் கண்டிப்பாக இருக்கும்.
பொய் பேசுவதை தவிர்த்து மற்ற குற்றங்கள் அனைத்தும் விலங்கின பதிவுகளில் இருந்து வந்தவைதான். ஒரு உயிர் இன்னொரு உயிரை வேட்டை ஆடும் பொழுது மூன்று விதமான குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றது
1. கொலை செய்தல்
2. உடலை உணவுக்காக திருடுதல்,
3. உயிரின் வாழும் உரிமையைப் பறித்தல்
இந்த மூன்று செயல்களும் விலங்கினத்தின் வாழ்க்கைக்கு தேவையானது, உகந்தது. ஆனால் தனக்கு வேண்டிய உணவை தானே உற்பத்தி செய்யும் ஆறாவது அறிவை கொண்ட மனிதனுக்கு இது தேவை இல்லாதது! ஆனாலும் மனிதன் விலங்கின் வித்தின் வழியே வந்ததால் இந்த விலங்கின செயல் பதிவுகள் அனைத்தும் அவனில் அடங்கயுள்ளன. சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு இந்த தீய குணங்கள் வெளிப்பட்டு கொண்டேயும் இருக்கின்றன.
குறைந்த மன அலைச் சுழலில், விலங்கின பதிவுகள் கிடையாது!
விலங்கினத்தின் தீய செயல்கள் அனைத்தும் அதிக மன அலைச்சுழலில் நிகழ்த்தப்பட்டதால், அதற்கான பதிவுகளும் அதே அலைச்சுழலில் தான் இருக்கும். விலங்கின பதிவுகள் மட்டும் அல்ல நம் அப்பா அம்மா, தாத்தா பாட்டி மற்றும் அவர்களின் முன்னோர்கள் செய்த தீய செயல்கள் அனைத்தும் அதிக மன அலைச்சுழலில் தான் பதிவு ஆகி இருக்கும். அமைதியான மன நிலையில் இன்னொரு உயிரினத்தை துன்புறுத்தவே முடியாது என்பதே இதற்க்கு காரணம்!
இது போன்ற தீய எண்ணங்கள், தீய குணங்கள் எழாமல் இருக்க, மனிதனிடம் உள்ள ஒரே ஒரு வழி மனதின் அலைச்சுழலை குறைத்து மனதை எப்பொழுதும் அமைதி நிலையில் வைக்க பழகி கொள்வது தான். இதற்கான பயிற்சி முறைகளையும் வாழ்க்கை கல்வியையும் அளிப்பதே ஆன்மீகத்தின் முக்கிய குறிக்கோள். இது போன்ற பயிற்சி முறைகளில் ஈடுபடும் பொழுது மன அலைச்சுழலை அதிகபடுத்தும் காரணிகளை தவிர்க்க வேண்டும்.
மாமிச உணவுகளில் உணர்சிகளை துண்டும் பதிவுகள் அதிகம் உள்ளன. காரணம் ஒரு உயிர் பிரியும் பொழுது அது ஒரு வகையான பயம் மற்றும் கொடும் துன்பத்திற்கு ஆட்படுவதே இதற்க்கு காரணம். இது போன்ற உணவுகள் உள்ளே சென்றால் ஏற்கனவே பதிவாகி உள்ள உணர்ச்சிவயப்பட்ட எண்ணங்கள் தூண்டப்படும், அதற்கேற்ற தீய குணங்களும் தீய செயல்களும் வந்து கொண்டுதான் இருக்கும், மனிதன் மனிதனாக வாழ முடியாது. அது மட்டும் அல்ல, தீய குணங்கள் துண்டப்படும் பொழது, சில பரம்பரை நோய் பதிவுகளும் கூடவே தூண்டப்படுகிறது, ஆகையினால் தான் சித்த வைத்திய பத்திய முறைகளில் மாமிச உணவு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று வலி உறுத்தப்படுகிறது.
தாவர உணவில் இது போன்ற பதிவுகள் இல்லையா?? அதுவும் உயிர்தானே??
இந்த கேள்விக்கு விடை காண்பதற்கு முன், நாம் வேறு சில நியமான கேள்விகளை மன சாட்சியோடு கேட்க வேண்டியுயள்ளது.
1. தாவரங்களை வெட்டினால் மீண்டும் வளர்கிறது ஆனால் ஆடு மாடுகள் போன்ற உயிரினங்கள் இறந்துவிடுகிறதே ஏன்??
2. ஆடு மாடுகளை வெட்டும் பொழுது வலியால் துடிக்கிறது, ஆனால் தாவரங்கள் துடிப்பதில்லயே ஏன்?
2. ஆடு மாடுகளை வெட்டும் பொழுது வலியால் துடிக்கிறது, ஆனால் தாவரங்கள் துடிப்பதில்லயே ஏன்?
விடை: தாவரங்களின் வேர்கள் பூமியோடு இனைந்து இருப்பதே இதற்க்கு காரணம்!!!!!
தாவரங்களுக்கு தொடு உணர்ச்சி உண்டு ஆனால் வலி உணர்ச்சி கிடையாது. ஜீவ காந்த ஓட்டத்தில் ஏற்படும் தடையே வலியாக உணரப்படுகிறது, ஜீவகாந்த ஓட்டம் தடை இல்லாமல் இயங்க வேண்டும் என்றால் இரத்த ஓட்டம், காற்றோட்டம், வெப்ப ஓட்டம் தங்கு தடை இன்றி சீராக இருக்க வேண்டும். உ.ம். உங்கள் உடலில் எதாவது ஒரு இடத்தில் கில்லி விடும் பொழுது மேலே குறிப்பிட்ட ஓட்டங்கள் தடை படுகிறது, ஆகையினால் ஜீவ காந்த ஓட்டமும் அந்த குறிப்பிட்ட இடத்தில் தடை படுகிறது, இதைத்தான் நாம் வலியாக உணர்கிறோம். இப்போது அதே இடத்தில் கொஞ்சம் தேய்த்து (massage) விடுகள், சுகமான உணர்வு ஏற்படும், காரணம் அங்கு உள்ள ஓட்டங்கள் தங்கு தடையின்றி சீராக உள்ளது.
தாவரங்கள் பூமியின் ஒரு பகுதி
தாவரங்களின் வேர்கள் பூமியோடு இனைந்து இருப்பதால், காந்த ஓட்டத்தில் ஏற்படும் குழப்பம் உடனடியாக பூமியால் சமன் செய்யப்படுகிறது (Earthing), வலி தவிர்க்கபடுகிறது. தாவரங்கள் வெட்டினாலும் மீண்டும் மீண்டும் வளர்வதற்கு இதுவே காரணம். ஆனால் ஆடு மாடுகளை வெட்டினால், அங்கு இரத்த ஓட்டம், காற்றோட்டம், வெப்ப ஓட்டம் தடைபடுகிறது, ஜீவகாந்தம் உடலில் சுழல முடியாமல் உடலை விட்டு வெளியேறி மரணம் சம்பவிக்கிறது.
பூமியில் இருந்து பிடுங்கப்படும் செடிகளுக்கு இலேசான வலி உணர்வு உண்டு, ஆனால் தாவரங்கள் ஓர் அறிவு உயிரினம் என்பதால் அது அடையும் வலி விலங்கினங்கள் அடையும் வலியை விட மிகவும் குறைவும். இந்த சிறு வலியை கூட ஒரு சில மதங்கள் தவிர்க்க முயற்சி செய்கிறது, அவர்கள் வெங்காயம், கிழங்கு வகைகள் போன்ற உணவுகளை உட்கொள்ள மாட்டார்கள், காரணம் அவைகள் பூமியில் இருந்து பிடுங்க படுவதால். சித்த வைத்திய முறைப்படி பார்த்தாலும் இது போன்ற உணவுகள் அனைவருக்கும் உகந்ததாக இல்லை என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
ஒரு சில மதங்களில் மாமிச உணவு ஏற்றதாக கருதப்படுகிறதே, அது ஏன்?
அந்த மதம் உருவான இடம், காலம், அப்பொழுது இருந்த அறிவியல் வளர்ச்சி இவற்றை சிந்தனை செய்து பார்த்தால், இந்த கேள்விக்கு விடை கிடைக்கும்.
பாலைவனப்பகுதிகளில் உருவான மதங்களில் மாமிச உணவு தவறில்லை என்று கருதப்படுகிறது, காரணம் அங்கு தேவையான காய்கறிகள் போதிய அளவில் கிடைப்பதில்லை, மற்றும் வேக வாகன வசதிகள் அந்த காலத்தில் கிடையாது ஆகையால் உயிர் வாழ்வதற்கு மாமிச உணவை உண்டே ஆக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. ஆனாலும் அங்கே வாழ்ந்த பெரியோர்கள் உயிரினங்களை வலி இல்லாமல் (அல்லது) வலியை குறைத்து கொல்லும் முறையை பின்பற்றினர், அதுவே “Halal Cut” என்று வழங்கப்படுகிறது. ஆனால் இப்பொழது அதற்க்கு அவசியமே இல்லை, காரணம் வேக வாகனங்கள் அறிவியல் வசதி பெருகிவிட்டது, உலகில் எங்கு காய் கரி விளைந்தாலும் அது உலகம் முழுவதும் கிடைக்கும் அளவிற்கு வசதிகள் பெருகி விட்டன, ஆகையால் மாமிச உணவிற்கு அவசியமே இல்லை!
திடீர் உணவு மாற்றம் உடலுக்கு ஆகாது!!!!!
மாமிச உணவிலிருந்து சைவ உணவிற்கு மாற வேண்டும் என்று நினைப்பவர்கள், உடனடியாக திடீர் என்று மாற கூடாது, ஏனென்றால் உடல் மாமிச உணவுகளில் இருந்து சத்துக்களை எடுக்க பழகிக்கொண்டுள்ளது, திடீர் என்று மாறினால், உடலில் சில குழப்பங்கள் ஏற்படும், ஆகையால் படி படியாகத்தான் மாற வேண்டும்.
சுயமாய் சிந்தித்தே செயல் படு!
நீங்கள் இது வரை வைத்துகொண்ட புரிதல், நம்பிக்கை, மதம் போன்ற உணர்வுகளை ஒதிக்கி வைத்து இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துகளை உங்கள் சுய சிந்தனைக்கு எடுத்துகொள்ளுங்கள், பிறகு உங்கள் அறிவிற்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதையே பின் பற்றுங்கள்
மேலே குறிப்பிட்ட அனைத்து கருத்துகளும் வேதாத்திரி மகரிஷியின் புத்தகங்களில் இருந்தும் பயிற்சி முறைகளில் இருந்தும் தெரிந்து கொண்டவை. மேலும் விவரங்களுக்கு வேதாத்திரி மகரிஷியின் புத்தகங்களை வாங்கி படியுங்கள்.
- இளம்பரிதி

